மகிழம்பூவாய் ஒரு காதல்…

 

 

வாசமுல்லையாய்

என் சுவாசம் எல்லையாய்க்

கொண்டவளுக்கு

கண்டெடுத்து முத்தொடுக்கிறேன்!

 

மகிழம்பூவாய்

மனமகிழ்ந்து வாழ

மனமுகிழ்த்து முத்தொடுக்கிறேன்!

 

பிறர்

எட்டினாலும் கிட்டாதவள்

என்னிடம் மட்டும்

ஒட்டி நிற்பாள் உறவு சொல்லி!

 

தொட்டவுடன்

சட்டென சிலிர்ப்பாள்

சடசடவென சரியும் உள்ளுக்குள்

சங்கீதக் கீர்த்தனைகளின் ஆலாபனைகள்!

 

பனித்துளியினூடாக

பரவிப் பெருகிப் பட்டுப்போல

பளிரீடும் பகலவனின் கதிர் போல..

ஆடவன் என் சொல்

கேட்டு சொக்கிப் போய்

சொர்ணமாய் சொலிக்கும் என்

சொந்தம் அவள்!

 

ஒட்டிச் செல்லும் காற்றின் சந்தமாய்…

தொட்டுச் செல்லும் நெருப்பின் வேட்கையாய்…

பற்றிப் படரும் நீரின் குளுமையாய்….

பாதந்தாங்கும் மண்ணின் மணமாய்…

பாரெங்கிலும் பரவி நிற்கும் ஆகாயக் குடையாய்…

 

ஒளிர்பவளின் காதோரம்

மென்மையாய் உதிர்க்கிறேன்..

“பிறந்தநாள் வாழ்த்துகள்..”

மென்மையாய் உதிர்கிறேன்..

“வாழ்த்து மலர்களாய்..”

 

பரிதவிப்புடன் படையலாய்..!

நாட்கள் நெருங்க நெருங்க
இதயத்தின் கனம்
அதிகரித்துக்கொண்டே செல்கிறது

துடித்த நிமிடங்களின் வலி
கண்ணெதிரே கடந்துபோகிறது
பரிமாறிய பதார்த்தங்கள் Continue reading

கேள்விக்குறியாய்….?

ஆயிரம் கேள்விகள்
ஆயிரம் பதில்கள்

பதில்களிலிருந்து உதிக்கின்றன
சில ஆயிரம் கேள்விகள்

அக்கேள்விகளுக்குப் பதிலாக
மேலும் சில கேள்விகளே Continue reading

மயக்கமா.. உறக்கமா..

திடுக்கிட்டு விழிக்கிறேன்..
மூளையின் இடுக்குகளில்
நினைவுகள் மலங்கலாய்
கசங்கி நிற்கின்றன..

மணித்துளிகள் கரைந்தாலும்
நினைவுத்துளிகளின் ஈரம் காயவில்லை Continue reading

என்னவன் நீயும் ஓர் உணர்வு!

சந்தோஷம் துக்கம்
இன்பம் துன்பம்
பரிவு பாசம்
மூச்சு பேச்சு
வாக்கு
இவை போல
எனக்கு என்னவன் நீயும் ஓர் உணர்வு!
என் உயிரிலும் உன்னைப்
பொதித்து வைத்திருக்கிறேன்
என்றாள் என்னவள் Continue reading

உன் கண்ணீர் முழுதும் நானாக..

மருத்துவமனைக்குப்
போகிறோம்
ஊசி போடவேண்டுமென்கிறார்
மருத்துவர்,

நீ என்னவென்று தெரியாமல்
சிரித்துக் கொண்டு
அமர்ந்திருக்கிறாய் Continue reading

நினைவுகளுடனும், தவங்களுடனும்

சாலையில் செல்லும்
கட்டிளங் காளையர் யாரும்
என்னைக் கவர்ந்திழுக்கவில்லை
உடன் பணி செய்யும்
பண்பான தோழர்கள் யாரும்
என்னைக் கவர்ந்திழுக்கவில்லை

பஸ்ஸில், ரயிலில், கோவிலில், கல்லூரியில்
யாரை நோக்கினும் ஏனோ யாரும் Continue reading

என்னவன் நீ மட்டும்தானடா

அந்தி சாயும் நேரம்
அழகாய் அற்புதமாய்
அறிவித்தாய் நின் காதலை!

ஆராதனை செய்ய
ஆர்ப்பரித்து உய்ய
ஆதவன் நான் தயங்கினேன்! Continue reading

ஆன்மாக்களின் முற்றுப் பெறா தேடல்

அழகிய பௌர்ணமி இரவில்
மெல்லிய மழைச் சாரலில்
வருடலாய் தவழும் குளிர்காற்றில்
உன்னுடன்
உன் நினைவுகளுடன்
சுகித்திருப்பேன்…….
மலைதேசத்தில்
மனம் மயங்கிக் கிடப்பேன்… Continue reading

நினைவுகளில் பசுமையாய்

உன் இதழ் முத்தம்
சிந்தும் நேரங்களில்
எல்லாம்
புதுப் புது விடியல்களெனக்கு….

உன் இதழ் சலசலத்து
வெளியேறும் வார்த்தைகள்
எல்லாம்
புதுப் புது இலக்கணமெனக்கு…. Continue reading